தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு : இன்று மேலும் 7 பேருக்கு உறுதியானது

உலகம் முழுவதும் பெருத்தொற்றாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக்கியுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


அந்த 7 பேரில், சென்னையைச் சேர்ந்த 43 வயதுடைய ஆண் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த 28 வயதுடைய ஆண் ஆகியோரும் அடங்குவர். அதேபோல், விழுப்புரத்தை சேர்ந்த 3 ஆண்களும் ,மதுரைச் சேர்ந்த 2 ஆண்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 7 பேரும் தனிமைப்படுத்துப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி தமிழகத்தில் மொத்தம் 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் குணமடைந்துள்ள நிலையில், மீதமுள்ளோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்